சாத்தான்குளம் தந்தை, மகன்கொலை செய்யப்பட்ட வழக்குஏற்கனவேசி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ஐந்து காவலர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளால்விசாரிக்கப்பட்டு பின்னர்மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மூன்று காவலர்களை,இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுசி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல்துறையினர் காவலில் வைத்து விசாரித்தபோது மகேந்திரன் என்பவர் உயிரிழந்த வழக்குத் தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.