Published on 27/04/2023 | Edited on 27/04/2023

அண்மையில் சென்னை குன்றத்தூரில் விசிக நிர்வாகி அதிஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது அண்ணன் குமரேசன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மேலும் ஒரு விசிக பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் கே.கே.நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசிக பிரமுகர் ரமேஷ் என்கிற குட்டி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய எம்ஜிஆர் நகர் போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.