மரங்களை வேறொரு இடத்தில் நடும்போது துளிர்க்குமா?- அரசு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வேரோடு மாற்றி நடும் போது, அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை பெற்று அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 Another of the trees  When planting in place chennai high court

உலகிலேயே மிக பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையான சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகத் திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது.

மரங்கள் வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட கடந்த 21- ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

 Another of the trees  When planting in place chennai high court

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மரங்களை வேரோடு எடுத்து, வேறு இடத்தில் நடுவதற்காக 5 லட்சம் ரூபாய் செலவாகும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரங்களை வேறொரு இடத்தில் நடும்போது, அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆலோசனை பெற்று அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 11- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

agriculture university chennai high court TamilNadu government trees plant
இதையும் படியுங்கள்
Subscribe