Advertisment

எருமை முட்டி இழுத்து சென்ற பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம்

Another tragedy for the woman dragged by the buffalo

Advertisment

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்துசென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகிய நிலையில் அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டபெண்ணுக்கு மேலும் ஒரு துயரம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற மதுமதி என்ற பெண்ணை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மதுமதியை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பெண்ணை மீட்க வந்தவர்களையும்எருமைமாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

Another tragedy for the woman dragged by the buffalo

பாதிக்கப்பட்ட மதுமதியை உறவினர்கள் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு மதுமதியின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு 48 தையலுக்கு மேல் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மதுமதியின் கால் தொடைப் பகுதி அழுகிவிட்டதாக தற்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காலில் அழுகிய நிலையில் இருந்த சதையை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். அந்தப் பகுதியில் மற்றொரு காலில் உள்ள சதையை எடுத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர்.

Medical Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe