Another tragedy against the imposition of Hindi language

Advertisment

இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராய் போராடி பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இவ்வரிசையில் மீண்டும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் தாழையூரில் திமுக கிளை அலுவலகம் முன்பு 85 வயதான விவசாயி தங்கவேல் என்றமுதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் விசாரணையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காவல்துறையினர் இது குறித்துவிசாரணை செய்து வருகின்றனர்.

தங்கவேல் இந்தி திணிப்பிற்கு எதிராகப் போராடி முன்னாள் முதல்வர் கலைஞரிடம் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் மறைந்த தங்கவேலுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்!இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம்.

இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.