Advertisment

தொடர்ந்து வெளிவரும் ஆசிரியர்களின் தகாத நடத்தைகள்... மேலும் ஒரு ஆசிரியர் போக்சோ பிரிவின்கீழ் கைது!

Continuing teacher misconduct ... and another teacher arrested under the pocso

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மேல்நிலையப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்பட்டது. மாணவிகளின் செல்ஃபோன் எண்ணை வாங்கிக்கொண்டு அவர்களிடம் பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் பேசிவந்துள்ளார்.

Advertisment

மேலும்,சிறப்பு வகுப்புக்காக தனது வீட்டிற்கு வருமாறும் தொந்தரவு செய்துள்ளார். அப்படி சிறப்பு வகுப்புகளுக்குவர மறுக்கும் மாணவிகளுக்கு மதிப்பெண்களைக் குறைத்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு மாணவியிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், முதுகுளத்தூர் காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் ராகவேந்திர ரவி விசாரணை நடத்திவந்தார். ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறியது உறுதியானதையடுத்து, ஹபீப் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

goverment school Ramanathapuram district teacher
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe