
இந்தியா முழுவதும் நீட் தேர்வு நேற்று முன்தினம் (12.09.2021) நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் 500க்கும் அதிகமான மையங்களில் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை தமிழ்நாட்டின் 18 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 224 மையங்களில் எழுதினார்கள்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நேற்று முன்தினம் தஞ்சாவூரில் நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய அவர், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். நேற்று நள்ளிரவு திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் தன்னுடைய மகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நீட் தேர்வு எழுதுவதற்கு முன்தினம் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவி நீட் தேர்வு காரணமாக பலியாகியுள்ளார்.