Advertisment

மாணவர்கள் வேளாண்மை படிக்க மீண்டும் வாய்ப்பு - அண்ணாமலை பல்கலைக்கழகம்

Another opportunity for students to study Agriculture  Annamalai University

அண்ணாமலைபல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிக்க மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சிதம்பரம் அண்ணாமலைபல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் வேளாண்மை படிப்புகளில் சேர்ந்து வருகிறார்கள்.

Advertisment

இதில் சுயநிதி மூலம் நடத்தப்படும் பிஎஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் நிரப்பப்படாத இடங்களுக்கு புதிதாக தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தினை பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், விருப்பமுள்ள அல்லது ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவ மாணவிகள் மீண்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

agriculture students
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe