Another one incident based on the Pollachi incident

Advertisment

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுப்பதாகக் கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி பேஸ்புக்கில்திரைப்படத்தில் நடிப்பதற்கானநேர்காணல் விளம்பரத்தை கண்டு பொள்ளாச்சியில் உள்ள மேன்சனில் பார்த்திபன் என்பவரை சந்தித்து உள்ளார். பார்த்திபன் கரூரை சேர்ந்தவர். பார்த்திபன், தான் இயக்கப்போகும் படத்தில் மாணவிக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகக் கூறி பாலில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் 18 வயதானதும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் 2020ம் ஆண்டு நவம்பர் 20 அன்று இணையம் மூலம் பதிவுத் திருமணம் செய்து கோவை புதூரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஐந்து மாதங்களுக்கு முன் பார்த்திபன் அவரது மனைவியை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கோவையில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.