vh

மொத்தம் 33 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது புதுச்சேரி மாநில சட்டப்பேரவை. இதில் மூன்று உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் ஏற்கனவே அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான் ஆகிய நான்கு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள சூழ்நிலையில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.