Advertisment

ஆழ்துளை கிணறு அருகே ஒரு மீட்டரில் மற்றொரு சுரங்கம் தோண்ட நடவடிக்கை!

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தைமீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்துவரும் நிலையில் தற்போது ரோபோ போன்ற கை அமைப்பு கொண்ட நவீன கருவி உள்ளே செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

rescue

சுஜித் தற்போது 80 அடிக்கு கீழ் சென்றுள்ளான் என்ற தகவலும் கிடைத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சியை தொடர்ந்து நெய்வேலியை சேர்ந்தஎன்எல்சி மற்றும் தனியார் அமைப்புகளை கொண்டுஆழ்துளை கிணற்றுக்கு அருகே சுரங்கள் தோண்ட திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது 23 மணிநேரத்தை கடந்து இந்த மீட்பு பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இந்த ஆழ்துளை கிணறுக்கு பக்கவாட்டில் ஒரு மீட்டர் தொலைவில் ஒரு மீட்டர் அகலத்தில் சுரங்கம்தோண்டி அதனுள் ஆக்சிஜனுடன் பயிற்சி பெற்ற வீரரை அனுப்பி குழந்தை சுஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisment

இந்த 80 அடி சுரங்கமானது ஒன்றறை மணிநேரத்திலேயே தோண்டி முடிக்க முடியும் என என்எல்சி சுரங்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

child Rescue thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe