Advertisment

ஆன்லைன் விளையாட்டால் மேலும் ஒரு தற்கொலை; மணப்பாறையில் பரபரப்பு

Another incident by online gaming; The excitement in Manaparai

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் நிராகரித்து அனுப்பி இருந்த நிலையில் இரண்டாவது முறையாகமீண்டும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த வில்சன் (26 வயது)என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 லட்சம் ரூபாயைஆன்லைன் ரம்மியால் இழந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே திருச்சியில் லூடோ விளையாட்டால் ஒருவர் இறந்த நிலையில் மீண்டும் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

manapparai thiruchy governor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe