ADVERTISEMENT

ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு!

07:39 PM Feb 25, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக பிரமுகரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இன்று மாலை இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமில்லாது அவரது மகள் ஜெயப்பிரியா, அவரது கணவர் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT