சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து போது பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Advertisment

another case on subhasree suspect

இச்சம்பவம் அனைவரின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று பலரும் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார். அதோடு, பேனர் அடித்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் பேனர் வைத்த அதிமுகவை சேர்ந்த ஜெயகோபால் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஜெயகோபால் மீது மேலுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணத்திற்கு விளைவிக்கும் செயலைசெய்தல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெய்கோபால் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவதாக புதிய பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.