Advertisment

நாகர்கோவில் காசியின் மீது மேலும் ஒரு வழக்கு... 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி.

Another case against Kasi in Nagercoil ... CBCID who took him into custody for 5 days and interrogated him

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப்போன்று தமிழகத்தை உலுக்கியது நாகா்கோவில் காசியின் பாலியல் வழக்கு.கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம் பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என 90-க்கும் மேற்பட்ட பெண்களிடம் முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் தொடா்பு ஏற்படுத்தி அவா்களிடம் நெருங்கி பழகி அதை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்களிடம் இருந்து லட்ச கணக்கில் பணத்தை கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்த்து வந்தான் காசி.

Advertisment

கோழிக்கடை நடத்தி வரும் கணேசபுரத்தை சோ்ந்த தங்கபாண்டியன் மகன் காசி, அம்பானி ரேஞ்சுக்கான ஆடம்பர வாழ்க்கையைப் பலா் ஆச்சரியத்துடன் தான் பார்த்தனா். இந்த நிலையில் தான் அந்த கள்ள பூனை காசிக்கு சென்னையை சோ்ந்த பெண் மருத்துவா் ஒருவா் மணி கட்டி சிறைக்கு தள்ளினார். காசியால் பாதிக்கபட்ட பெண்கள் யாரும் புகார் தர முன் வராத நிலையில் அந்த பெண் மருத்துவா் கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி நாகா்கோவில் எஸ்.பி ஸ்ரீநாத்க்கு மெயில் மூலம் புகார் கொடுத்தார். பின்னா் 24-ஆம் தேதி காசி கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன் மற்றும் ஹார்ட்டிஸ்க்கில் அவனால் சீரழிக்கபட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், படங்கள் இருந்தன.

Advertisment

இதையடுத்து தீவிரமடைந்த அந்த வழக்கு, பின்னா் மேலும் 5 பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனா். மாதா் சங்கத்தினரின் போராட்டங்களால் காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த 7 மாதங்களாக தொடா்ந்து சிறையில் இருக்கும் காசி மீது கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த இன்னொரு இளம் பெண் புகார் கொடுத்தார். கல்லூரி மாணவியான என்னிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடா்பை ஏற்படுத்தி என்னை கன்னியாகுமரிக்கு வரவழைத்து கன்னியாகுமரி ஹோட்டலில் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி வந்தான். நான் கல்லூரி மாணவி என்பதால் போலீசில் புகார் கொடுக்காமல் இருந்தேன். என்றார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி மீது 7வது வழக்கைப் பதிவு செய்து கோர்ட் மூலம் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து நேற்று (11-ம் தேதி) மாலை மீண்டும் சிறையில் அடைத்தனா். சிறையில் இருந்து விசாரணைக்கு அழைத்துவரபட்ட காசியை பார்க்க அவனுடைய உறவினா்கள் நண்பா்கள் என அங்குமிங்குமாக நின்று கொண்டியிருந்தனா்.

சிக்ஸ் பேக் உடம்புடன் எந்த நேரமும் மேக்கப்புடனும் சொகுசு காரில் ஆடம்பரமாக வலம் வந்துகொண்டிருந்த காசியை சிறை வாழ்க்கை தலைகீழாக மாற்றிவிட்டது. சுருக்கம் விழுந்த முகம், குழி விழுந்த கன்னம் என விரிந்து இருந்த மார்பு சுருங்கி எலும்பும் தோலுமாக காணப்படும் காசியை பார்த்து நண்பா்களும் உறவினா்களும் முணுமுணுத்தனா். முதல் முறையாக கை விலங்கோடு கோர்ட்டுக்கு வரும்போது பத்திரிகையாளா்களை பார்த்து கையை தூக்கி ஹார்ட்டின் சிம்பலை காட்டிய காசி இன்றைக்கு அதே கையில் சிவப்பு பையை தூக்கி நடக்கிறான்.

இந்த நிலையில் காசி மீதான தற்போதைய விசாரணை குறித்து நாம் விசாரித்தபோது, காசி வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த லேப்டாப்பில் அழிக்கப்பட்ட 35 ஃபோல்டா்களில் 1000-க்கு மேற்ப்பட்ட வீடியோக்களும், போட்டோக்களையும் சைபா் க்ரைம் போலீஸ் உதவியுடன் எடுக்கபட்டுள்ளது. அந்த வீடியோக்கள் எல்லாமே காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள். இதில் 30-க்கும் மேற்ப்பட்ட குடும்ப பெண்களின் வீடியோக்களும் உள்ளன தெரிவிக்கின்றனர். வீடியோவில் உள்ள பெண்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். மேலும் மீண்டும் காசியை வெளியே எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளனா் எனவும் தெரிவிக்கின்றனர்.

nagarkovil
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe