பா.ஜ.க நிர்வாகி மீது அடுத்தடுத்து பாய்ந்த வழக்கு!

Another case against BJP IT Wing district in-charge

தமிழ்நாடு முதலமைச்சர் மீது அவதூறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் அதனைக் கேட்கப் போன திமுக மாவட்ட மாணவரணி இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாத்துரையை தாக்கியதாக, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க ஐ.டி விங்க் செயலாளர் அறந்தாங்கி வட்டம்அரசர்குளம் கீழ்பாதி அரசை. கமல்கண்ணன் மீது நாகுடி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வீரய்யா, வெள்ளனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக அரசை. கமல்கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல கமல்கண்ணன் மீது மேலும் பல புகார்களும் வழக்குகளும் வர வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கின்றனர் பா.ஜ.க வினர்.

arrested police pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe