Another AIADMK executive fired for scoring poster for Sasikala!

Advertisment

சொத்துக்குவிப்பு வழக்கில்நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில், சசிகலாவை வரவேற்றுபேனர் வைத்த நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்சுப்ரமணிய ராஜா 27-ஆம் தேதியேஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி அண்ணாதுரைஎன்பவர் சசிகலாவுக்குப் போஸ்டர் அடித்த நிலையில், அண்ணாதுரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் - இபிஎஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு களங்கம், அவப்பெயர்உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.