Advertisment

51 நிர்வாகிகள் திமுகவில் இருந்து நீக்கம் - துரைமுருகன் அறிவிப்பு 

durai murugan

Advertisment

தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துபிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலைசந்திப்பதால், இரு கட்சிகளும் கணிசமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியுள்ளன. அதன் மூலம், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த திமுக, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிர்வாகிகள் பல இடங்களில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் 51 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் 56 பேர் நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 51 பேரை தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

duraimurgan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe