
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தீவிர ஊரடங்கு நாளை முதல் கடைபிடிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவி கோரியிருந்த நிலையில், பல்வேறு தரப்புகளில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வரை கரோனா நிவாரணத்திற்கு 181 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் கரோனா தடுப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இன்று மீண்டும் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தினசரி கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1.6 லட்சமாக அதிகரித்துள்ளதால் ஆர்டி-பிசிஆர் கிட் வாங்க 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.