Skip to main content

குரூப் 1 தேர்வு எப்போது? - டிஎன்பிஎஸ்சி தேதி அறிவிப்பு! 

 

Announcement for Group 1 exam!

 

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

 

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டப் பதவிகளுக்கு காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி. (TNPSC)இணையதளத்தில் இன்று (21/07/2022) முதல் ஆகஸ்ட் மாதம் 22- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் ஆகஸ்ட் 27- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29- ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குரூப் 1 பணியிடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 30- ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்படும் என்று கூறியுள்ள டி.என்.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.