Advertisment

‘காந்தியடிகள் காவல் விருது’ அறிவிப்பு

Announcement of Gandhiadigal Police Award for Police Officers

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்குக் காந்தியடிகள் விருது வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. சசாங்சாய், சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ப. காசி விஸ்வநாதன், ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கா.மு. முனியசாமி, மதுரை மண்டல மத்திய பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அ. பாண்டியன் மற்றும்இராணிப்பேட்டை அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த ராணிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெ. ரங்கநாதன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இவ்விருது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன் பரிசுத் தொகையாக 40 ஆயிரம் ரூபாய்ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

police medal Award
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe