kamal

தமிழகத்தில் வரயிருக்கின்ற சட்டப்பேரவைத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம்,கூட்டணி என தொடர்ந்து இயங்கி வரும் நிலையில்,நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழா மாநாடு பிப்ரவரி 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'மண்ணையும், மக்களையும், மொழியையும் காக்கவே நாம் களம் இறங்கி இருக்கிறோம். சின்னம் கிடைத்த இருபதே நாட்களில் நாம்பெற்ற வாக்குகள் அனைவரையும்விழிவிரிக்க செய்த சாதனை. வழிதேடும் அரசியல்,வழிகாட்டும் அரசியலுக்கு தொடக்க உரை சேர்த்து எழுதுவோம்'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் நான்காவது ஆண்டு தொடக்க விழா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.