
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேரடி மற்றும் தொலைதூரக் கல்வி பயிலும் இறுதி ஆண்டு /இறுதி பருவ மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் 30 வரை இணைய வழி (Online) மூலமாக தேர்வுகள் நடைபெறுகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக உயர்கல்வித் துறையின் ஆணையின்படி இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வு அட்டவணை மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகள் பல்கலைக்கழக இணையத்தளம் www.annamalaiuniversity.ac.in மற்றும் அந்தந்த துறைகள் மூலம் தெரியப்படுத்தபட உள்ளது. இணையவழி தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அந்தந்த துறை தலைவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், மாணவர்களின் நலன் கருதி, மாதிரி தேர்வு இணையத்தளம் வழியாக அடுத்த வாரத்தில் நடத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Follow Us