/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/semozhi-park-art.jpg)
செம்மொழிப் பூங்காவில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
செம்மொழிப் பூங்கா, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். இந்த பூங்காவை 24 நவம்பர் 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். சாலை ஓரத்தில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழிப் பூங்காவை அமைத்தது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செம்மொழிப் பூங்காவில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி பிப்ரவரி 10 ஆம் தேதி முதல்தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியில் சுமார் 10 லட்சம் மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி மற்றும் மதுரையில் இருந்து கொண்டு வரப்படும் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி சுமார் ஒரு வார காலம் வரை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)