Advertisment

''நான்கைந்து நாட்களுக்குள் டெல்லியிலிருந்து தகவல் வரும்!''- குஷ்பு பேட்டி!

நான்கைந்து நாட்களுக்குள் முதல்வர் வேட்பாளரைபாஜகதலைமை அறிவிக்கும் எனபாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புதெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த சிலவாரங்களுக்கு முன்புஅதிமுக-பாஜக கூட்டணிஅரசு விழா மேடையிலேயே மத்திய அமைச்சர் அமித்ஷாமுன்னிலையில் உறுதி செய்யப்பட்டாலும், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விமேலோங்கியுள்ளது. அதிமுக தலைமையில் தான் கூட்டணிஎனமுதல்வர் எடப்பாடி பழனிசாமிதிட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.அதேபோல், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் எனஏற்கனவேஅதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆனால் பாஜக தமிழகத்தலைமையோ, முதல்வர் வேட்பாளர் குறித்துதேசியத்தலைமைதான் முடிவெடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில்சென்னை புதுப்பேட்டையில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளைச் சந்திக்க நடிகை குஷ்பு சுந்தர் இன்று (02.01.2021)காலை வந்தார். அப்போது அப்பகுதியில் இருக்கும் பா.ஜ.க. கொடியை ஏற்றி, பொதுமக்களையும் சந்தித்தார்.அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்தகுஷ்பு, ''கூட்டணியைப் பொறுத்தவரைக்கும்ப்ரோட்டோகால் உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் தேசியஜனநாயகக் கூட்டணி இருக்கும் பொழுது தேசியத் தலைமைதான் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும்.இதை நாங்கள் ஒருப்ரோட்டோகாலாக வைத்துள்ளோம். அந்த வகையில்தான் முதல்வர் வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம் எனச் சொல்லியிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரைஅதிமுகவுடன் கூட்டணி இருக்கிறது.கூடியசீக்கிரத்தில், ஒரு நான்கைந்து நாட்களில்எல்லாத்தகவலும்டெல்லியில் இருந்து வந்துவிடும்'' என்றார்.

kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe