Advertisment

பள்ளி மாணவர்களுக்கான விடுமுறைத் தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையரின் அறிவிப்பு! 

Announcement by the Commissioner of School Education regarding holidays for school students!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு பள்ளிக்கல்வி வாரியபாடத் திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாவதனால், மாணவர்களின் நலன் கருதியும் தேர்வர்களுக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு ஏதுவாக இனி வரும் நாட்களில் நடக்க இருக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் அன்று தேர்வு எழுதும் அரைநாள் மட்டும் பள்ளிக்கு வருவர்.

Advertisment

ஏற்கனவே, அந்தந்த மாவட்டங்களில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இறுதித் தேர்வுகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட நாட்களில் மட்டும் தேர்வு நடைபெறும். பிற நாட்களில் வகுப்புகள் ஏதும் நடைபெறாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

students schools Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe