annamalai university

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் மருந்துகள், உபகரணங்கள் வாங்கியது மற்றும் எம்.ஒ.யூ( புரிந்துணர்வு) ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளது என்ற புகார்களை தொடர்ந்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் ஆய்வாளர்கள் சதிஷ் மற்றும் திருமால் உள்ளிட்ட காவலர்கள் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வியாழன் காலை 10 மணி முதல் 4 மணி வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டு விசாரணை செய்தனர். சோதனையில் முக்கிய ஆவனங்களை கைப்பற்றியுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர்களிடம் எப்போது கூப்பிட்டாலும் விளக்கம் தரவேண்டும் என்று கூறிசென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தில் கடந்த 17ந்தேதி தான் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடத்தி ஆவணங்களை கைபற்றியது பல்கலை கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுகுறித்து ஊழியர்கள் மத்தியில் முன்பு எம்ஏஎம் நிர்வாகத்தில் பல்கலைக்கழகம் இருந்த போது டெண்டர், எம்ஓயு மற்றும் பணி மாறுதல்களில் நடந்த ஊழலைவிட பல மடங்கு ஊழல்கள் தற்போது நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.

-காளிதாஸ்