ராஜபாளையத்தில் நகரின் திட்டப்பணிகள் சரியான திட்டமிடல் இல்லாததால், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், வாகன போக்குவரத்தும் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருவதால், ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் இணை சங்கங்களின் ஆலோசனைக் கூட்ட முடிவின்படி, வரும் 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை, ஒரு நாள் முழு கடையடைப்பு நடக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ராஜபாளையத்தில் நகர் திட்ட பணிகளில் சுணக்கம் - கடையடைப்பை அறிவித்த வர்த்தக சங்கம்
Advertisment