சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா வருகிற 27-ம் தேதி விடுதலையாகஇருக்கிறார்.அவரின்விடுதலையைஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவுஏற்பட்டதால்,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்அவருக்குகரோனா தொற்றும்உறுதி செய்யப்பட்டுள்ளசெய்தி, கட்சிப்பொறுப்பாளர்களையும்தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில்சசிகலா விரைவில் குணமடைய வேண்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமுதேவர் என்பவர்திண்டுக்கல்லில் உள்ள கோட்டைமாரியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை செய்தார். அதைத் தொடர்ந்துதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, வத்தலக்குண்டு,ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பெரும் திரளாகச் சென்று சசிகலா பெயரில் சிறப்புப் பூஜை செய்து செய்தனர்.அதுபோல் சில பகுதிகளில் சசிகலாவுக்காக அன்னதானமும் வழங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து மேற்கு மாவட்டத்திலும் சசிகலாவுக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச்சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் சசிகலாவுக்காக சிறப்புப் பூஜை செய்தும் அன்னதானம் வழங்கினார்கள்.