திண்டுக்கல் மாவட்டம்வத்தலகுண்டில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிலீஸ்புரம் பகுதியில் வசிக்கும் மும்மத பொது மக்களின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் முப்பெரும்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Advertisment

annathanam function in dindigul

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே. பி. முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். அன்னதான ஏற்பாடுகளை ராகவேந்திரா நண்பர் குழுவினர் செய்திருந்தனர்.

annathanam function in dindigul

Advertisment

மேலும் இத்திருவிழாவில் பசுமை வதிலை இயக்கம் சார்பில் பக்தர்களுக்கு இலவச மரக்கன்றுகள் ஆயிரம் வழங்கப்பட்டன. பத்திர எழுத்தர் சங்கத் தலைவர் பா.சிதம்பரம், ரோட்டரி சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கினர், ஏற்பாடுகளை பசுமை வதிலை ஒருங்கிணைப்பாளர் மருதராஜ் செய்திருந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.