nn

'அண்ணாமலையா அது யாரு' எனச் செய்தியாளர்களை நோக்கி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்விஎழுப்பினார்.

Advertisment

இன்று மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த நிர்வாகி சுப்ரமணியன்சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

'கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியைஎப்படி பார்க்கிறீர்கள்' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''நம்முடைய பிரதமருடைய பாப்புலாரிட்டி கொஞ்சம் குறைந்து வருகிறது. அத பண்ணனும் இத பண்ணனும் பேசிட்டு இருப்பார். ஆனால் சொன்னது எதையும் செய்யவில்லை'' என்றார். அப்பொழுது செய்தியாளர்கள் 'ஒரு பாஜக தலைவராக இருந்து கொண்டு பிரதமரை விமர்சனம் செய்கிறீர்களே' என்ற கேள்விக்கு, “ஏன் ஜனநாயகம் இல்லையா? ஜனநாயகத்தில் இப்படி பேசலாம். ஒபாமா பைடனை எதிர்த்து அமெரிக்காவில் பேசவில்லையா? ஜனநாயகத்தில் இருக்கலாம். இது என்னுடைய கருத்து.மோடி சொன்ன வாக்குறுதியில் ஒன்றுமே செய்யவில்லை”என்றார்.

Advertisment

'தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி கேஸ் போய்க் கொண்டிருக்கிறதே ஆளுநர் ஆர்.என். ரவியை திமுக எதிர்த்து வருகிறார்களே' என்ற கேள்விக்கு, ''அதை நான் பார்க்கவில்லை. அதை நான் கவனிக்கவில்லை'' என்றார்.

'2024 தேர்தல் எப்படி இருக்கும். பிரதமராகும் வாய்ப்பு மோடிக்கு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “பிஜேபி கட்டாயமாக ஜெயிக்கும். பிரதமராக மோடி இருப்பாரா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது'' என்றார். அதிமுக குறித்த கேள்விக்கு, “அதிமுகவிற்கு கொள்கை கிடையாது. பல்டி அடித்துக் கொண்டே இருப்பார்கள்”என்றார்.

மாமன்னன் படம் குறித்த கேள்விக்கு, ''திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சினிமாவை தவிர வேறொன்றும் இல்லை. இந்த தேர்தலில் அவர்கள் தோற்பார்கள்'' என்றார்.

'அண்ணாமலையின்எழுச்சியை எப்படி பார்க்கிறீர்கள்' என்ற கேள்விக்கு, ''அண்ணாமலை யாரு'' என்றார்.

'பிஜேபியின் பிரசிடெண்ட், தமிழக பாஜக தலைவர்' எனச் செய்தியாளர்கள் விளக்கம் கொடுக்க, “தமிழ்நாட்டில் பிஜேபி இருக்கா? நான் இதுவரைக்கும் பிஜேபியை எங்கேயும் பார்க்கவில்லை”என்றார்.