Advertisment

சனாதனம்; “பட்டியலினத்தவருக்காக நந்தியை விலக சொன்னார் சிவன்” - அண்ணாமலை

Advertisment

Annamalai's explanation of Sanatana with Shiva and Nandi

Advertisment

அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது திரிக்கப்பட்டுப் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி என இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில் சனாதனம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த விளக்கம் மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “திருப்புன்கூர் என்ற ஊருக்கு சென்றால் இன்றும் கூட அங்கே உள்ள கோயிலில் நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். இதை எல்லோரும் பார்க்க முடியும். அங்கே பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சிவனை பார்க்க அனுமதி இல்லை என்று சொன்னதால், நந்தியை சற்று விலகச்சொல்லி சிவன் காட்சியளித்த தர்மம் நம்முடைய சனாதனம். இதை பல கோவில்களில் நாம் பார்க்கிறோம்” என்று கூறி உள்ளார். தற்போது அண்ணாமலையின் விளக்கத்திற்கும் சமூக வலைத்தளங்களில் எதிர்வினைகள் கிளம்பியுள்ளது.

Annamalai sanathanam
இதையும் படியுங்கள்
Subscribe