அண்ணாமலையின் பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் ‘தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நேற்று(19/11/2023)நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி. சேகர் கலந்துகொண்டு பேசினார். அதில், “2024 தேர்தலில் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக முழு பெரும்பான்மையுடன் மோடி பதவியில் அமருவார். ஆனால் அதற்குத்தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலையின் பங்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட பாஜக ஜெயிக்காது” எனத்தெரிவித்தார்.