இலங்கைக்கு உதவ இருக்கும் விஷயத்தை அரசியல் ஸ்டண்ட் செய்ய வேண்டாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இலங்கைக்கு அரிசி மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்புவோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை பா.ஜ.க. வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மத்திய அரசு ஏற்கனவே இலங்கைக்கு ஏராளமான பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. எனவே, கடந்த 2009- ஆம் ஆண்டு இரண்டு மணி நேர உண்ணாவிரம் போல், அரசியல் செய்யாமல் மத்திய அரசின் மூலம் இலங்கைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.