தமிழகம் -தமிழ்நாடு என்றபிரச்சனையில் தமிழ்நாடு சிக்கித்தவித்து வருகின்றது. கடந்த வாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டுக்குப் பதிலாகத்தமிழகம் என்று கூறலாம் என்று கூறியவுடன், தமிழ்நாடு அரசியலில் புயலைக் கிளப்பியது. அதிமுக மௌனம் காத்தாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அல்லது ஆளுநருக்கு ஆதரவாக இல்லை. அதைத் தொடர்ந்து சட்டசபையிலும் சில பிரச்சனைகளை ஆளுநர் தரப்பு உருவாக்கியது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரை வைத்துக்கொண்டே அவருக்கு எதிரான ஒரு கண்டன தீர்மானத்தைக் கொண்டு வருவார் என ஆளுநரும், பாஜக தரப்பும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பிரச்சனையாகத்தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பாக அனுப்பப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு மற்றும் தமிழ்நாடு என்ற வாசகம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த விழாவை தமிழ்நாடு அரசு புறக்கணித்தது அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தது.
இதைத் தொடர்ந்து இன்று பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள பொங்கல் வாழ்த்து மடலில் தமிழ்நாடு என்ற சொல் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது விவாதமாக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைவர் பாரதியஜனதா கட்சி என்ற வாசகத்தை மட்டுமே அண்ணாமலை பயன்படுத்தி உள்ளார் என்பது தற்போது சமூக ஊடகங்களில் விவாதமாக உருவாகியுள்ளது.