Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நள்ளிரவில் போராட்டம்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Annamalai University students struggle at midnight

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மேலாண்மை துறை இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் கல்வி சுற்றுலா செல்வது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான இறுதி ஆண்டு மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கல்வி சுற்றுலாவிற்கு சம்பந்தப்பட்ட துறை தலைவரிடம் அனுமதி கூறியுள்ளனர் துறை தலைவர்  நான்கு முறைக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டு இறுதியாக அனுமதி வழங்கியுள்ளார். 

 

இந்த நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு கல்வி சுற்றுலாவிற்கு அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மை துறை மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றோருடன் உடைமைகளை எடுத்து வந்து பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது மேலாண்மை துறை தலைவர் உதயசூரியன் மற்றும் முதல்வர் விஜயராணி ஆகியோர் மாணவர்களிடம் கல்வி சுற்றுலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து  பல்கலைக்கழக வளாகத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலாண்மை துறை மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலா ரத்து செய்யப்பட்டதால் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பாக இருந்தது.

 

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் வியாழக்கிழமை அனைத்து மாணவர்களின் அழைத்து கருத்து கேட்டு வெள்ளிக்கிழமை இரவு கண்டிப்பாக கல்வி சுற்றுலாவுக்கு அனுமதி அளிப்பதாக உறுதி அளித்தார். இன்றைக்கு வந்து அனைத்து மாணவர் மாணவிகளும் பல்கலைக்கழக விடுதியில் தங்க வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு 2 மணி வரை இந்த பிரச்சனை தொடர்ந்து நடந்ததால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பாக இருந்தது.

 

இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், மேலாண்மை துறைத் தலைவராக உள்ளவர் உதயசூரியன். இவர் மாணவர்கள் கல்வி சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்காமல் நான்கு முறை கடந்த 3 மாதங்களாக அனுமதியை ரத்து செய்துள்ளார். இது குறித்து மேலாண்மைத் துறை முதல்வரிடம் மாணவ, மாணவிகள் துறைத்தலைவர் செய்யும் சில தவறான செயல்பாடுகளையும் அவர் ஏன் கல்வி சுற்றுலாவை ரத்து செய்கிறார் என்பதை புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் துறை முதல்வர் விஜயராணி துறைத் தலைவரை அழைத்து கேட்டுள்ளார். இதனைதொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கல்வி சுற்றுலா செல்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் துறைத் தலைவரைத் தாண்டி எப்படி முதல்வர் அனுமதிக்கலாம் என்ற கோபத்தில் அவர் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தர் இடம் அனுமதி வாங்குவதில் தாமதப்படுத்தி கல்வி சுற்றுலாவிற்கு அனுமதி கிடைக்காமல் செய்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் துறைத் தலைவர் வாட்ஸ் அப் குரூப்பில் பணம் கட்டாத மாணவர்கள் பல பேர் உள்ளதாக பதிவு செய்துள்ளார் அதனால் கல்வி சுற்றுலாவுக்கு செல்ல அனுமதி இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதில் அதிக அளவு ஸ்காலர்ஷிப் பெரும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பணம் கட்டவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு மாணவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கல்வி சுற்றுலாவின் போது மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள் ஆனால் இந்த ஆண்டு ஸ்காலர்ஷிப் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்