Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி கட்டணம் உயர்வு மாணவர்கள் தொடர் போராட்டம்...

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதிகளில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தேர்தலை புறகணிக்கபோவதாக அறிவித்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

annamalai university students protest

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் 19 விடுதிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ரூ 45 ஆயிரம் விடுதியின் ஆண்டு கட்டணமாக செலுத்தி விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென ரூ 5,000 விடுதி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு மாணவர்கள் திடீரென உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களிடம் வசூலிக்கும் ரூ 45,000 விடுதி கட்டணத்திற்கு வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். விடுதிகளில் வைப்பு தொகை ரூ. 5,000 வசூலிப்பதை பிடித்தமில்லாமல் திருப்பி அளிக்க வேண்டும். கல்வி உதவி தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பற்றிய தெளிவான குறுஞ்செய்தி மற்றும் வெள்ளை அறிக்கையை அளிக்க வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் என யாரும் இதுவரை மாணவர்களை அழைத்து பேசுவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டத்தில் மாணவர்கள் தேர்தலை புறக்கணிக்கும் வகையில் பாதகைகள் ஏந்தி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.

protest College students Annamalai University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe