Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு...

annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,“தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உறைவிடப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணாமலைபல்கலைக்கழகம் 90 ஆண்டுகளை கடந்து மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் கல்வியளித்து உயரிய சேவையினை செய்து வருகிறது. தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டு குழுவால் 2014-ம் ஆண்டில் ‘A’கிரேடு பெற்றுள்ளது.

Advertisment

கலை, அறிவியல், தத்துவம், மானிடவியல், பொறியியல், வேளாண்மையியல், கல்வியியல், கணிப்பொறியியல், தொழில்நுட்பவியல், இசை, மருத்துவம், மேலாண்மை எனபல்துறைகளில் கற்பித்தல் மற்றும் ஆய்வுகள் சிறப்புடன் நடைபெறுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நடப்பு 20-21ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisment

பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டம், ஒருங்கிணைந்த முதுகலை பட்டயம் சான்றிதழ் படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்பு மிக்க செயல்திறன் படிப்பு (B.Voc.)களும் வழங்கப்படுகின்றன.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்றவையாகும். மாணவர்கள் வரும் ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் (www.annamalaiuniversity.ac.in).

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலமும், மருத்துவம், பல் மருத்துவம் சேர்க்கை மாநில அரசின் ஒருங்கிணைந்த கலந்தாய்வு மூலமும் நடைபெறும்.

விவசாயம், தோட்டக்கலை, செவிலியர் மற்றும் மருந்தாளுனர் படிப்பிற்கான கலந்தாய்வு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணையம் (Online) மூலம் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முற்றிலும் இணையம் (Online) வழியாக நடைபெறும். ஆகவே மாணவர்கள் தங்களுடைய அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டும்”என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Notice admission student Annamalai University
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe