Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ஊதியம் கேட்டு கோட்டாட்சியரிடம் மனு

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் ஊதியம் கேட்டு கோட்டாட்சியரிடம் மனு



சிதம்பரம், அக்.9- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு செப் மாத ஊதியம் இன்று வரை வழங்கவில்லை. மாத ஊதியத்தை மாதத்தின் இறுதி நாட்களில் வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கடந்த ஒரு வாரத்திற்குமேல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து அரசும், பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கைகள்எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ஊழியர்கள் மாத ஊதியம் கால தாமதம் இல்லாமல்வழங்க வலியுறுத்தி திங்கள் கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சிதம்பரம் கோட்டாட்சியர்அலுவலகம் வந்தனர். பின்னர் கோட்டாட்சியர் ராஜேந்திரனை சந்தித்து இது குறித்து மனு கொடுத்தனர்.
Advertisment

-காளிதாஸ்
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe