/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2342.jpg)
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கடல் அறிவியல் புலம், கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் மிதவை தாவரம், கடல்புல் மற்றும் கடற்பாசி ஆராய்ச்சியில் கடந்த 21 வருடங்களாகப் புல முதல்வர் அனந்தராமன் ஈடுபட்டு வருகிறார். அறிவுசார் சொத்துரிமை இந்தியா, இந்திய அரசால் காப்புரிமைச் சட்டம், 1970ன் படி “கடல்பாசி கலவையானது தாவரங்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு எந்த ஒரு பருவ காலத்திலும் சமச்சீராக வளரச் செய்கிறது” என்ற கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை இவருக்கு வழங்கியுள்ளது.
இந்தக் காப்புரிமையானது 2017 ஏப்ரல் 27ஆம் தேதியிலிருந்து 20 வருடங்களுக்கு வழங்கியுள்ளது. இதைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் மற்றும் பதிவாளர் கே. சீதாராமன், ஆகியோர் புல முதல்வரை அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இத்துறையில் உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)