Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியதால் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
Advertisment



சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு செப் மாத ஊதியம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முற்றுகை, பேரணி, உண்ணாவிரதம், மணித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போரட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஊழியர்கள் அனைவரும் வகுப்புகளை புறகனித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் சங்க தலைவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் மணியன், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ மற்றும் சின்டிகேட் உறுப்பினருமான பாண்டியன் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மதியத்திற்குள்(வெள்ளி) செப் மாத சம்பளம் வழங்கபடும். மற்ற கோரிக்கைகள் அரசின் கவனத்தில் உள்ளது. இதனை விரைவில் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதி கூறினார்கள்.
Advertisment

இது குறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத் தலைவர் மனோகரன் கூறுகையில் செப் மாத சம்ளத்தை வழங்கியுள்ளனர். துணைவேந்தர் கேட்டுகொண்டதின் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளோம். இதுகுறித்து ஏற்கெனவே பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு கடிதம் அளித்துள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்களின் பதவி உயர்வு. சம்பள உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள், 7ஆவது சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை வரும் 23ந்தேதிக்குள் நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அனைத்து ஊழியர்களும் ஈடுபடுவோம் என்றார்.

-காளிதாஸ்
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe