அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவகல்லூரியை பல்நோக்கு மருத்துவ கல்லூரியாக மாற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சட்டபேரவையில் தாக்கல் செய்தார். இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்தும். மேலும் இது கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரியாக செயல்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு சிதம்பரம் பகுதி மக்கள் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஊழியர் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

Annamalai university - medical college - tamilnadu Government

இதுகுறித்து கடந்த 2012-ம் ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "அப்போது பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என்று அப்போதிருந்து பல்கலைக்கழக ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பின்னர் இதுகுறித்தும் அரசு முழுகட்டுபாட்டில் எடுக்கவேண்டும் என்று எனது தலைமையில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து மிகபெரிய போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று மனு கொடுத்து வலியுறுத்தியதின் பேரிலும் இதுகுறித்து சட்ட மன்றத்தில் பேசியதின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகத்தை அரசு 2013-ல் முழு கட்டுபாட்டில் எடுத்தது.

Annamalai university - medical college - tamilnadu Government

அதே நேரத்தில் இதனுடன் இணைந்த மருத்துவ கல்லூரியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தேன். அதனையொட்டி கடந்த சில ஆண்டுகளாக அரசு மருத்துவகல்லூரியாக மாற்றுவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் மருத்துவகல்லூரி மருத்துவமனை சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது அரசு மாவட்ட மருத்துவகல்லூரியாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை தற்போதுள்ள நிலையிலே நடத்தாமல் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும்" என்று தமிழக அரசை கேட்டுகொண்டார்.

2012 ஆண்டுகளில் அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த மதியழகன் கூறுகையில், "பல்கலைக்கழகத்தை சீர்படுத்த எடுத்த கோரிக்கையில் இதுவும் ஒன்று. இதுகுறித்து சட்டமன்றத்தில் அப்போதைய எம்எல்ஏ பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். பின்னர் அரசு பல்கலைக்கழகத்தை முழுகட்டுபாட்டில் எடுத்த பிறகு பல்கலைக்கழக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் முதன்மை ஆட்சியர் ஷீவ்தாஸ்மீனாவிடம் பல்கலைக்கழக நிதி சிக்கலை சரிசெய்ய இந்த கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தினோம்.

Annamalai university - medical college - tamilnadu Government

அதன் அடிப்படையில் தற்போது இதனை மாவட்ட மருத்துவ கல்லூரியாக அறிவித்துள்ளது. கடலூர் மாவட்ட மக்களின் வரபிரசாதமாகும். இங்கு பயிலும் மாணவர்களுக்கு மற்ற அரசு மருத்துவகல்லூரிகளில் என்ன கட்டணமோ அதே கட்டணம் இனிமே வசூலிக்கப்படும். அரசின் மற்ற மருத்துவகல்லூரியில் இருந்து அனைத்து விதமான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணிமாறுதல் பெறுவார்கள். எனவே இதனை அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிலையில் இபோதுள்ள அனைத்து குறைகளையும் சரிசெய்து எந்த குறைகளும் இல்லா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போல் பல்நோக்கு வசதிகள் கொண்ட மருத்துவ கல்லூரியாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்று அரசை கேட்டுகொண்டார்.

Annamalai University Tamilnadu govt
இதையும் படியுங்கள்
Subscribe