சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் உள்ள 7 வகுப்பறைகளை ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 9 லட்சத்தில் ப்ரொஜக்டர்கள்,ஸ்மார்ட் போர்டுகள் உள்ளிட்ட அதி நவீன கருவிகள் கொண்டு வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்பாட்டுக்கு துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேசன் கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார். ஒஎன்ஜிசி நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷியாம்மோகன், பொதுமேலாளர் மணி மற்றும் பல்கலைக்கழக இயற்பியல் துறை தலைவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

hydrocarbon project not get permission in union govt ongc ceo speech

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷியாம்மோகன் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஓஎன்ஜசி நிறுவனம் குருடாயில் மற்றும் இயற்கை எரிவாயுவை மட்டும் எடுத்து வருகிறது. இதனால் இதுவரை எந்த பாதிப்பும் வந்தது இல்லை. தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய பெட்ரோல் துறை அமைச்சகம் தமிழகத்தில் ஷேல் மற்றும் மீத்தேன் வாயுக்களை எடுக்ககூடாது என்று உத்தரவிட்டுள்ளது. எனவே எங்களுக்கு அனுமதி இல்லை. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தும் முயற்சியும் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இல்லை.

hydrocarbon project not get permission in union govt ongc ceo speech

Advertisment

தமிழகத்தின் டெல்டா பகுதி உள்ளி பல இடங்களில் குருடாயில் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளதா என்று நாங்கள் ஆய்வு செய்து சிலுவை வடிவ குழாய் அமைத்துள்ளோம். இதனை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசு ஒற்றை வடிவ அனுமதி வழங்கி இருந்தாலும். மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தமிழகத்தில் செயல்படுத்தகூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பிச்சாவரம் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதற்கான அனுமதியும் இல்லை என்று கூறினார்.