ADVERTISEMENT

நிதிச்சிக்கலில் அண்ணாமலை பல்கலை... பல கிலோ மீட்டர் தூரத்தில் பணிமாற்றம்... வேதனையில் ஊழியர்கள்

05:18 PM Feb 05, 2020 | kalaimohan

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிதி சிக்கலின் காரணமாக தமிழக அரசு பல்கலைக்கழகத்தை முழு கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 12 ஆயிரத்து 500 பேருக்கு சம்பளம் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை, இந்த நிலையில் தமிழக அரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் போக்குவரத்து துறை அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாற்றியுள்ளனர்.

இதுவரை 4500 க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களை மாற்றியுள்ளனர். இதில் அதிகமாக குறைவாக சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர்கள் தொலைதூரத்திற்கு மாற்றலாகிச் சென்று சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வேலை செய்யும் இடங்களில் சமைத்தும் தங்கி வருகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் அதிக சம்பளம் வாங்கும் 850 சிறப்பு அதிகாரி என்ற பொறுப்புகளில் உள்ளவர்களை இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இவர்களை மாற்றினாலே போதும் 4500 பேருக்கும் இணையாக இவர்களது சம்பளம் இருக்கும் எனவே நிதிநிலை குறைய வாய்ப்பு உள்ளது என்றது ஊழியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் சிறப்பு அதிகாரிகளாக உள்ளவர்கள் தமிழக அரசின் பணியிடங்களுக்கு மாற்றம் செய்ய முயற்சித்தபோது அவர்களுக்கு பல பேருக்கு தகுதியே இல்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான சம்பவமாக உள்ளது.

மேலும் இவர்களுக்கு கல்விக்கு ஏற்ற தரத்தைக் குறைத்து சம்பளத்தை அதற்கேற்றவாறு நிர்ணயம் செய்து தமிழக அரசின் பணிகளுக்கு அனுப்பலாம் என பல்கலைக்கழகம் முடிவெடுத்த போது, இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஊழியர்களுக்கு எதிரான நிலைதான் ஏற்படும் என்ற அறிந்தவர்கள் சம்பந்தப்பட்ட உயர் கல்வித் துறையின் அமைச்சரின் நெருங்கிய உறவில் தம்பி ஒருவரும் இதில் உள்ளார். அவரது ஏற்பாட்டில் ஒருவருக்கு ரூபாய் 3 லட்சம் என வசூல் செய்து மொத்தம் 25 கோடி ரூபாய் கொடுத்து இவர்களுக்கு சம்பளம் குறைக்காமல் அப்படியே தமிழக அரசின் பணியிடங்களுக்கு மாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்களில் தகவலாக உள்ளது.

இதுவரை 17 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளதாகவும், மீதி பணம் விரைவில் கொடுக்க உள்ளதாகவும் இதனை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த s.o. என்கிற பதவிகளில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் இருக்கும் இருந்த உறவினர்கள் அதிகம் பேர் உள்ளதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பல்கலைக்கழகம் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

தகுதி இல்லாதவர்களை வைத்து பல்கலைகழகம் நடத்தப்படுகிறது. ஆனால் தகுதி உடையவர்களை பல கிலோ மீட்டர் தூரம் பணிமாற்றம் கொடுத்து வேதனை அடைய செய்ய வைக்கப்பட்டது பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் கடைநிலை ஊழியர்கள் பணி மாற்றத்தின் பிறகு மன உளைச்சலால் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT