Advertisment

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு..

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்று துணைவேந்தர் வே.முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

 Annamalai University faculty staff ordered to work from home

பல்கலைக்கழக மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்விற்கு தயாராவதற்கு, பாட புத்தக குறிப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதற்கு அந்தந்த துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பாட குறிப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். பல்கலைக்கழக ஆண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறுபல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

corona virus aAnnamalai University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe