ADVERTISEMENT

அரசியல் கட்சியின் தேர்தலை மிஞ்சும் அண்ணாமலைப்பல்கலைக்கழக ஊழியர் சங்க தேர்தல்!!!

11:04 PM Jun 13, 2018 | kamalkumar

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர்கள் தேர்தல் மூலம் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்து எடுப்பார்கள். இவர்கள் ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பாலமாக செயல்பட்டு ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள். இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊழியர் சங்க தேர்தல் மூலம் மனோகரன் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் சங்கத்தின் தலைவர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டினார். இதில் பல்கலைக்கழகத்தின் பெருபான்மையான ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். எதிர் அணியின் தலைவர் மதியழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

கூட்டம் ஆரம்பித்து சிறிதுநேரம் அமைதியாக நடந்துகொண்டு இருந்தது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சங்கத்தின் தலைவராக உள்ள மனோகரன் சென்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி பேசினார்கள். அதன் பிறகு பேசிய என்எம்ஆர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜா பல ஆண்டுகளாக என்எம்ஆர், தற்காலிக பணியாளர்கள், கான்சால்டேட் பணியாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களின் பணியை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி பதவிக்கு வந்தீர்கள் நடவடிக்கை இல்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தில் கணவனை இழந்து தாலியை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 450க்கும் மேற்பட்டவர்கள் உங்களுக்கு வெளியே ரோஜா பூ மாலையுடன் காத்திருக்கிறார்கள் என்று பேசியபோது மனோகரன் தரப்பினர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். எதிர் தரப்பினரோ ராஜாவை தொடர்ந்து பேசவிடுங்கள் என்று சத்தமிட்டனர். இதனால் பொதுக்குழுவில் இருதரப்பினருக்கும் கூச்சல் குழப்பம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவர் சபை நாகரிகம் இல்லாமல் பேசபடுகிறது என்று பொதுக்குழுவை புறக்கணிக்கிறேன் என கூறி ஊழியர் சங்க தேர்தலுக்கு வரும் 15-ந்தேதி வேட்புமனு தாக்கல், 27-ம் தேதி தேர்தல் நாள். 28-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும், என்று கூறிவிட்டு கூட்டத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டார். அவரை எதிர் தரப்பினர் வெளியே செல்லவிடாமல் மறித்து முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனையறிந்த காவல்துறையினர் அவரை மீட்டு வெளியே அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து எதிர் அனியினர் பொதுக்குழுவை நடத்த முற்பட்டனர். அப்போது அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் வீரமணி கூட்டத்தின் தலைவரே புறக்கணித்து சென்ற பிறகு கூட்டத்தை நடத்தக்கூடாது என்று கூறி அனைவரையும் கலைந்துப்போக செய்தனர்.

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் பெரும்பாலானோர் என்னதான் எதிர் கருத்து இருந்தாலும் அதனை உள்வாங்கி பதில் சொல்லி இருக்கனும். தமிழக அரசு பணிகளுக்கு சென்ற பல்கலைக்கழக ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள் அவர்கள் இருக்கும் மாவட்டத்தில் ஒரு இடத்தில் அல்லது தபால் ஓட்டுக்கள் போடுவதற்கு நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும். அனைத்து ஊழியர்களும் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து தான் ஓட்டு போடவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். அரசு பணி நாட்களில் தேர்தலை வைத்துள்ளனர். எங்களுக்கு எப்படி விடுமுறை கிடைக்கும். நாங்க வாக்கு அளிக்கக்கூடாது என்பது தெளிவாக்குகிறார்கள். கடந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழக சர்வீஸ் சென்டர்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது. ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மதியழகன் தலைமையில் ஊழியர்கள் தேர்தல் அதிகாரி நடேசனை சந்தித்து திங்கள் கிழமைகளில் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். ஊழியர்கள் அனைவரும் சிரமம் இல்லாமல் ஓட்டுபோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.

மனோகரன் தரப்பினரோ தலைவராக பொறுபேற்றதிலிருந்து ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்று கொடுத்துள்ளார். பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் சங்கத்தை சிறப்பாக நடத்தி வந்தவர் தலைவர் மனோகரன். எதிர் தரப்பினரைவிட மனோகரன் தரப்பினர் ஊழியர்கள் நலனில் அக்கறைகொண்டவர்கள். பொதுக்குழுவை களங்கப்படுத்தும் நோக்கில் சபை நாகரிகம் இல்லாமல் பேசுகின்றனர். இரு தரப்பினருக்கும் பிரச்சணை எதுவும் வந்துவிடகூடாது என்பதற்காக பொதுக்குழுவை பாதியிலே புறக்கணித்தோம். எங்களிடம் சங்க கணக்குகள் நேர்மையாக உள்ளது. இதனை எங்கும் நிருபிக்க தயாராக உள்ளோம் என்கிறார்கள். அண்ணாமலைப்பல்கலைக்கழக ஊழியர் சங்க தேர்தல், அரசியல் கட்சியினர் தேர்தலை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என்பது எந்த ஐயமும் இல்லை என்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்களே. இதற்கு காலம்தான் பதில் கூறும்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT