அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளர்(பொறுப்பு) ஆக முனைவர் மு.பிரகாஷ், பதவி ஏற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்னர் விவசாயபுலத்திலுள்ள மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் துறையில் துறைத்தலைவராக பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக முனைவர் ஆர்.எஸ்.குமார், இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்னர் புவி அறிவியல் துறையில் துறைத்தலைவராகவும் மற்றும் விடுதி காப்பாளர் குழும ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். புதியதாகப் பொறுப்பேற்றவர்களுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.