Advertisment

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண்மை, இளம் அறிவியல் வேளாண்மை (சுயநிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை திங்களன்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் வெளியிட்டார்.

Advertisment

a

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இளம் வேளாண்மை அரசு ஒதுக்கிட்டில் கன்னியாகுமரியை சார்ந்த ரேவதி 200-க்கு 200 கட்அப் பெற்று முதல் இடத்திலும், தருமபுரியை சோர்ந்த சுரேஷ் 195.25 இரண்டாம் இடம், சிதம்பரத்தை சார்ந்த சௌமியா 194 மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இதே போல் வேளாண்மை சுயநிதியிலும், தோட்டக்கலை படிப்பிலும் மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

Advertisment

மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையில் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 6 அல்லது 7 ஆம் தேதி நடைபெறும். கலந்தாய்வு குறித்து மாணவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். மாணவர் கல்வி கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வ நாராயணன், மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் ராம்குமார், வேளாண்துறை முதல்வர் சாந்தா கோவிந்த் உள்ளிட்ட துறைத்தலைவர்கள் பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

aAnnamalai University
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe