அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் மத்திய வெளியுறவு துறையுடன் இணைந்து மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
புல முதல்வர் முனைவர் சாந்தா கோவிந் தலைமை வகித்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் வெளியுறவு துறையுடன் இணைந்து நடத்தப்படும் இத்தகைய மாணவர் கலந்துரையாடல் நிகழ்வுகள் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பெறவும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெற பெரிதும் உதவும் என்றார்.
இதனைதொடர்ந்து தற்போது ஜப்பான் நாட்டின் இந்திய கவுன்சில் ஜெனரலாக உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல முன்னாள் மாணவர் பாலசுப்ரமணியன் ஷியாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவ பருவ செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார். உலகம் முழுவதும் அமைதி, வளம், உணவு, பாதுகாப்பு மற்றும் கலாச்சார உறவுகள் மேம்பட இந்திய வெளியுறவு துறை கடுமையாக முயன்று வருவதாக தெரிவித்த அவர் வேளாண் மாணவர்கள் இன்றைய போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு தன்னம்பிக்கை மற்றும் கடுமையான உழைப்பு மூலம் உயர்பதவிகளுக்கு வந்த நமது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார். மாணவப் பருவத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் நினைவு கூர்ந்து வழிகாட்டிய பேராசிரியர்களின் துணை கொண்டே உயர்ந்த நிலைக்கு வரமுடிந்தது இத்தகைய சிறப்பான தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்றார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
நிகழ்ச்சியில் துபாய் நாட்டின் குரோவர் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் செந்தில், சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வேளாண் புல துறை தலைவர்கள் மூத்த பேராசிரியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் துறை நன்றி தெரிவித்தார்.