Advertisment

 அண்ணாமலை திருமாவளவன் திடீர் சந்திப்பு!

Annamalai Thirumavalavan sudden meeting melmaruvathur

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பங்காரு அடிகளாருக்கு இரங்கல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு மரியாதையுடன் மேல் மருவத்தூர் கோவிலுக்குள்ளேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இன்று(23.10.2023) பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனிடையேபாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக மேல்மருவத்தூர் வந்துள்ளனர். ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து திருமாவளவன் கிளம்பும் போது, ஒரே நேரத்தில் அண்ணாமலையும், எல்.முருகனும் திருமாவளவனும் நேரில் பரஸ்பரம் சந்தித்து கைக்குலுக்கிக்கொண்டனர். அப்போது திருமாவளவன் அண்ணாமலையிடம் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். அப்போது அண்ணாமலையுடன் கேசவ விநாயகமும் வந்திருந்த நிலையில் அவரையும் திருமாவளவன் சந்தித்து நலம் விசாரித்தார்.

Advertisment

Annamalai Thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe